பேருந்து வசதி இல்லாத சிறைக்காடு கிராமம்: பள்ளி செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி
போடி அருகே சிறைக்காடு கிராம மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல வசதியில்லாமல் தவித்து வருகின்றனர்.
போடி அருகே சிறைக்காடு கிராம மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல வசதியில்லாமல் தவித்து வருகின்றனர்.
போடியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள சிறைக்காடு கிராமம். இங்குள்ள மாணவ, மாணவிகள் போடி வந்து தான் படிக்க வேண்டும். இதற்காக இவர்கள் காலை, மாலையில் ஆட்டோவில் தலா 10 கி.மீ., துாரம் பயணிக்கின்றனர். ஆட்டோவில் பயணிக்க அதிக கட்டணம் செலவாகிறது. இதனால் பணம் இல்லாத நாட்களில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதில்லை.
வாரத்தில் ஓரிரு நாட்களே இவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே இக்கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் மட்டுமாவது பஸ் வசதி செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu