பிரதமர் மோடியின் வருகையை அமெரிக்கா கொண்டாட காரணம்

பிரதமர் மோடியின் வருகையை  அமெரிக்கா கொண்டாட காரணம்
X

பைல் படம்

இந்தியாவுடன் ஏற்படுத்தப்போகும் வர்த்தக உறவே அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்க உதவும் நிலை காணப்படுகிறது

பிரதமர் மோடியின் வருகையினை அமெரிக்கர்கள் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். பாரதப் பிரதமரின் அமெரிக்க விஜயம் அங்கு ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதுடன் பல முக்கியமான நகர்வுகளை கொண்டு இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.

நரேந்திர மோடி கடந்த ஆண்டு காலநிலை மாற்றம் குறித்தான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் சமயம். இது யுத்தத்திற்கான காலம் இல்லை. பொருளாதார வளர்ச்சிக்கான காலம் என அறைகூவல் விடுத்தார். போதாக்குறைக்கு அப்போது நடந்த உச்சி மாநாட்டிலும் வளரும் நாடுகளின் மீதான தடையை குறித்து பேசி பலரையும் அதிர்ச்சியில் வாயடைக்க செய்தார். இவர் அந்த சமயத்தில் குறிப்பிட்டது உக்ரைன் ரஷ்யா மோதலை தான். இந்தியா யார் பக்கமும் இல்லை என ஆணித்தரமாக எடுத்து சொன்னார். இதனால் பல இன்னல்களை எல்லாம் மறைமுகமாக நம் இந்திய தேசத்தின் மீது திணிக்கப்பட்டது. ஜார்ஜ் சொரெஸ் முதல் லிண்டா தண்பெர்க் வரை கதக்களி ஆடிக்காட்டினதை அமெரிக்கா நமட்டு சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.

உலகிற்கே நன்கு தெரிந்தது கனடா வாழ் சீக்கியர்கள் மூலமாக அமெரிக்க மிஷனரிகள் தான் பஞ்சாப் மற்றும் டெல்லியில் விவசாய போராட்டம் நடத்தினர் என்று. யாரும் எதிர்பாராத தருணத்தில் மத்திய அரசு பல படிகள் கீழிறங்கி வேளாண் சட்டத்தை வாபஸ் வாங்கி அதிர்ச்சி அளித்தது. அந்த சமயத்தில் மிகப் பெரிய அவமானம்... என எகத்தாளமும் கேலியும் வெளிப்பட அமைதி காத்தது நம் இந்திய அரசு.

எப்படியாவது உக்ரைனுக்கு ஆதரவாக இந்தியா நிற்கிறது என அறிவிக்க வேண்டும் என எதிர்பார்த்தனர் மேற்கு உலக வாசிகள் பலரும். பல்லை கடித்து கொண்டு பொருத்துக் கொண்டு இருந்தது நம் தேசம். குறைந்த பட்சம் நேட்டோவில் இணைந்து கொள்ள வேண்டும் என பிடிவாதம் காட்டியது மேற்கு உலகம். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை நம்மவர்கள்.

இதோ இன்று உலக வல்லரசு நாடாக தன்னை அறிவித்துக் கொண்ட அமெரிக்காவின் பொருளாதார அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் டாலர்கள் உக்ரைனில் கரைகிறது என்கிறார்கள். ஆனாலும் ரஷ்யர்களை வெற்றி கொள்ள முடிவதில்லை என்கிற நிலை தான் நீடிக்கிறது.

இது ஒரு புறம் இருக்க... அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிக்கன் சடுதியில் பெய்ஜிங் வரை சென்று தைவான் தனி நாடு அல்ல என்றும் அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்காது என்று சொல்லி விட்டு வந்திருக்கிறார். அதாவது சீனா தைவானை ஆக்கிரமித்தால் அமெரிக்கா ஏன் என்று கேள்வி கேட்டு வராது என வெளிப்படையாக சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க.,... வட கொரியாவை விட்டு ஜிங்பிங், வல்லரசு பட்டத்தை பிச்சை கேட்டு வந்த பிளிக்கன் என பேச வைத்து அதிரடித்திருக்கிறார். இவையெல்லாவற்றுக்கும் ஒரே காரணம் அதன் பொருளாதாரம். படுபாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டு இருக்கிறது.

மாறாக நம் இந்திய பொருளாதாரம் மட்டுமே உலக அளவில் சீரான வளர்ச்சி கண்டு வருகிறது. இன்றைய தேதியில் 7% வளர்ச்சி என்பதற்கு குறைவில்லாமல் ஸ்திரமாக வளர்ந்து வருகிறது. பலரும் பொருமி பொங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உக்ரைன் ரஷ்யா மோதலில் ரஷ்யாவின் கை நாளுக்கு நாள் ஓங்க ஆரம்பித்து விட்டது. இதிலிருந்து மீடியாவின் பார்வையை திசை திருப்ப பிரம்ம பிரயத்தனங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள் மேற்கு உலக வாசிகள். அங்கு தான் அப்படி என்றால் அமெரிக்காவின் பல மாகாணங்களில் போதைக்கு அடிமையான கும்பல் பெருக ஆரம்பித்திருப்பதாக உளவு வட்டாரங்களில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

காரணம் வேலையில்லா திண்டாட்டம்.... மற்றும் முறையான வருமானம் இல்லை என்கிறார்கள் அங்குள்ள நிலவரம் அறிந்தவர்கள். பாரதப் பிரதமரின் ஒப்பந்தங்களில் தான் அமெரிக்க மேல் மட்ட பிரஜைகளின் வாழ்வாதாரம் அடங்கி இருக்கிறது என பலரும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தோடு கூட தங்களுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் தான் டாலரின் மதிப்பை நிலைநிறுத்தும் என நம்புகிறார்கள் அவர்கள். ஏனெனில் ரூபாயில் வர்த்தக செய்வதை கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா விரிவுபடுத்த ஆரம்பித்திருக்கிறது. பிரிக்ஸ் பிளஸ் என்கிற அமைப்பை ஏற்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு அது தங்களை பாதிக்கும். டாலரின் தோல்விக்கு வழி வகுக்கும் என அஞ்சுகிறார்கள் அமெரிக்கர்கள்.

யுத்தத்தினால் வெற்றி கண்ட தேசம்....யுத்த பராக்கிரமங்களை பேசி புளங்காகிதம் அடைந்த நேசம் இன்று நம் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக குடை சாய்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நம் இந்திய தேசம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி ஒளிர ஆரம்பித்திருக்கிறது. இவையெல்லாம் வெறும் தொடக்கம் மட்டுமே. இன்னமும் போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil