தேனி மாவட்டத்தில் கடும் உச்சத்தில் தொடரும் காய்கறிகளின் விலை

தேனி மாவட்டத்தில் கடும் உச்சத்தில் தொடரும் காய்கறிகளின் விலை
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை இல்லாத நிலையிலும், காய்கறிகளின் விலை உச்சத்திலேயே தொடர்கிறது.

தேனி மாவட்டத்தில் சில்லரை மார்க்கெட்டில் பத்து வகை காய்கறிகளின் விலை கிலோ 100 ரூபாயினை தாண்டி விற்கப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி விலை கிலோ 120 என்ற நிலையிலேயே தொடர்கிறது.

தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து குறைவால் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன.

இன்று தேனி சில்லரை மார்க்கெட்டில் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், முருங்கை பீன்ஸ், பட்டர்பீன்ஸ், துவரங்காய், பாகற்காய், முருங்கைகாய், சோயா பீன்ஸ், பட்டர்பீன்ஸ் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட காய்கறிகளின் விலை சில்லரை மார்க்கெட்டில் கிலோ 100 ரூபாயினை கடந்துள்ளது. அதுவும் தக்காளி கிலோ 120 ரூபாய் என்ற நிலையில் தொடர்கிறது.

பட்டர் பீன்ஸ் கிலோ 250 ரூபாயினை தாண்டியது. மொச்சக்காய் கிலோ 80 ரூபாயினை எட்டியுள்ளது. பச்சைப்பட்டாணி, டர்னிப், முள்ளங்கி, நுால்கோல், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை கிலோ 70 ரூபாயினை தாண்டி உள்ளது.

இரண்டாம் ரக காய்கறிகள் கூட தனியாக பிரித்து விற்கப்படவில்லை. கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் காய்கறிகளை முதல்தரம், இரண்டாம் தரம் என பிரிக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது மழை குறைந்துள்ளது. இன்னும் சில நாட்கள் மழை இல்லாவிட்டால் படிப்படியாக காய்கறி வரத்து அதிகரித்து விலை குறையும் வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....