தேனி மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

தேனி மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்
X
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகுந்த கட்டுக்குள் உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே தலா ஒன்று என்ற அளவில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. மீதம் ஐந்து நாட்களும் சைபர் தொற்று (யாருக்கும் இல்லை) என பதிவாகி உள்ளது.

இன்று தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 157 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். ஆனால் இன்று யாருக்கும் தொற்று இல்லை என முடிவுகள் வெளியாகி உள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகுந்த அளவில் கட்டுக்குள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare