நாட்டு மக்களுக்காக பிரார்த்தனை; இந்து எழுச்சி முன்னணி தீர்மானம்

நாட்டு மக்களுக்காக பிரார்த்தனை; இந்து எழுச்சி முன்னணி தீர்மானம்
X

இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் தேனியில் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழா அன்று நாட்டு மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்ய வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி தீர்மானம் நிறைவேற்றியது.

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டஅமைப்பாளர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்து எழுச்சி முன்னணி நடத்த கூடிய ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் ஸ்ரீவிநாயகர்சதுர்த்தி அன்று பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு(+2 மற்றும் 10 ) மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பிராத்தனை செய்ய வேண்டும். உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய உடல்நிலை சரியில்லாத முதியோர் மற்றும் இயலாதவர்களும் குணமடைய இறைவனை வேண்டி பிராத்தனை செய்ய வேண்டும்

இந்திய நாடு முழுவதும் பெண்களுக்கு முழுமையான வாழ்வியல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கருதி சிறப்பு ப்ரார்த்தனை செய்ய வேண்டும். உலக நாடுகளில் இருக்கும் இந்து மக்களுக்கு பாதுகாப்பிற்காக சிறப்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story