தேனியில் நாளை மின்தடை: தேனி, பூதிப்புரம் சுற்றுக்கிராமங்களில் நாளை மின்தடை இருக்கும்

தேனியில் நாளை மின்தடை: தேனி,  பூதிப்புரம் சுற்றுக்கிராமங்களில் நாளை மின்தடை இருக்கும்
X

பைல் படம்.

தேனி, பூதிப்புரம் சுற்றுக்கிராமங்களில் நாளை மின்தடை இருக்கும் என தேனி மின்வாரிய அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை புதன்கிழமை தேனி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பொம்மையகவுண்டன்பட்டி,அல்லிநகரம், தேனி ஜி.ஹைச்.,ரோடு, பெரியகுளம் ரோடு, பாரஸ்ட் ரோடு, திட்டச்சாலை, பங்களாமேடு, மதுரை ரோடு, பி.சி.,பட்டி, முத்துதேவன்பட்டி, மாரியம்மன்கோவில்பட்டி, பூதிப்புரம், ஆதிபட்டி, வாழையாத்துப்பட்டி, அரண்மனைப்புதுார், பள்ளப்பட்டி, திருமலாபுரம், கோடாங்கிபட்டி, ஆர்.எம்.டி.சி., காலணி, வயல்பட்டி, சத்திரப்பட்டி, உப்பார்பட்டி, தாடிச்சேரி, மற்றும் சுற்றி உள்ளகிராமங்களில் மின்சப்ளை நிறுத்தப்படும் என தேனி மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி