தமிழகத்திலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் 300ஐ தாண்டி உயர்ந்து கொண்டு வரும் நிலையில், இன்னும் புதைந்து கிடப்படவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கு தெரியாமல், நாடே கலங்கிப்போய் கிடக்கிறது. இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என கடந்த ஆண்டு இஸ்ரோ எச்சரித்துள்ளது. அப்படி எச்சரித்தும் கோட்டை விட்டு விட்டது கேரள அரசு. கேரளா மட்டுமல்ல, தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அபாயம் குறித்து, வயநாடு உள்ளிட்ட 147 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டு கடந்த ஆண்டே இஸ்ரோவின் 'தேசிய தொலைநிலை உணர்தல் மையம்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் கோவை, குமரி, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்ட மலைப்பகுதிகளில் பல இடங்கள் நிலச்சரிவு அபாயம் மிக்கவை என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி மாவட்டங்கள் நிலச்சரிவு ஆபத்து சற்று குறைவாக உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலச்சரிவால் அதிக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நிலச்சரிவு அபாயம் மிக்க 147 மாவட்டங்களில் கோவை மாவட்டம் 36வது இடத்திலும், திண்டுக்கல் மாவட்டம் 41வது இடத்திலும் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu