கிராமங்களில் இருந்து தேனிக்குள் சப்ளையாகும் பாலிதீன் பைகள்
பைல் படம்
தேனியில் கிராமங்களில் இருந்து பாலிதீன் பைகள் நகர்பகுதிக்குள் சப்ளையாகின்றன. பாலிதீன் பைகளுக்கு அரசு தடை விதித்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. தடை விதிக்கப்படும் முன் பகிரங்கமாக வலம் வந்த இந்த பாலிதீன் பைகள், தடைக்கு பின்னர் திரைமறைவில் நடமாடுகின்றன. ஆனால் இவற்றின் பயன்பாடு குறையவில்லை. குறிப்பாக தேனியில் மீன்கடைகள், இறைச்சி கடைகளில் இந்த பைகள் மறைமுகமாக நடமாடுகின்றன.
தேனியை சுற்றி உள்ள கிராமங்களில் இவற்றை பதுக்கி வைத்துள்ள வியாபாரிகள், தேனிக்குள் டூ வீலரில் கொண்டு வந்து கடை, கடைக்கு சப்ளை செய்கின்றனர். இது குறித்து நகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறியதாவது: தேனி நகராட்சியில் கொடுவிலார்பட்டியை சேர்ந்த ஒரு நபர் பாலிதீன் பைகளை விநியோகம் செய்தார். அவரை நாங்கள் பிடிக்க முயன்றோம். அவரது கொண்டுவந்த பைகளை அப்படியே போட்டு விட்டு டூ வீலரில் தப்பி விட்டார்.
இவரை பிடிக்க நாங்கள் ரகசிய இன்பார்மர்களை நியமித்துள்ளோம். போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். இவர் மட்டுமல்ல, கிராமங்களில் தனியாக உள்ள தோட்டத்து வீடுகளில் பாலிதீன் பைகளை பதுக்கி வைத்து தேனியில் குறிப்பிட்ட நேரத்தில் ரகசியமாக வந்து விநியோகம் செய்து விட்டு செல்கின்றனர்.
இதனை விட மிகப்பெரிய தலைவலி பேக்கிங்கில் வரும் பாலிதீன்கள் தான். இவற்றை சேகரித்து அழிப்பது மிகுந்த சவாலான பணியாக உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு அதிகளவில் தேவைப்படுகிறது. மக்கள் பாலிதீன் பைகளில் பேக்கிங் செய்யப்படும் பொருட்களின் பயன்பாடுகளை குறைத்தால் தான், நகரின் துாய்மையை பாதுகாக்க முடியும். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu