கம்பத்தில் விநாயகர் சிலைகளை போலீசார் அகற்றியதால் பரபரப்பு

கம்பத்தில் விநாயகர் சிலைகளை போலீசார் அகற்றியதால் பரபரப்பு
X

கம்பத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி, விநாயகர் சிலைகளை போலீசார் கைப்பற்றினர்.

Ganesh Procession - தேனி மாவட்டம் கம்பம் நகரில் போலீசார், அனுமதியின்றி வைத்திருந்த விநாயகர் சிலைகளை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Ganesh Procession -தேனி மாவட்டம் கம்பம் நகரில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி குழுவினர் போலீசாரின் அனுமதியின்றி 35 சிலைகளை வைத்து வழிபட்டனர். பின்னர் இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் போலீசாரின் அனுமதி இல்லாததால் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஊர்வலத்தை நடத்தக் கூடாது என போலீசார் தடை விதித்தனர். தவிர விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விழா குழுவினர் விநாயகர் சிலைகளை போலீசார் எடுத்துச் செல்லகூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி குழுவைச் சேர்ந்த 19 பேரை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். சிலைகளும் இதுவரை கரைக்கப்படவில்லை. சிலைகளை கரைக்க அனுமதிக்க வேண்டும் என விழாக்குழுவினர் கம்பத்தில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சு நடத்திய போலீசார் சிலைகளை கரைக்க அனுமதி தருவதாக உறுதி அளித்தனர். இன்று சிலைகள் கரைக்கப்படும் என தெரிகிறது. இதனால் கம்பத்தில் பதட்டமான சூழல் நிலவியது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!