வரதட்சணையாக ரூ. 1.5 கோடி - 250 பவுன் நகை கேட்ட டாக்டர் மீது வழக்கு

வரதட்சணையாக ரூ. 1.5 கோடி - 250 பவுன் நகை  கேட்ட டாக்டர் மீது வழக்கு
X
மனைவியிடம் ரூ. 1.5 கோடி பணம், 250 பவுன் நகை வரதட்சணை கேட்ட டாக்டர் , அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்கு பதிவு

தனது மனைவியிடம் 1,5 கோடி ரூபாய் பணம், 250 பவுன் நகை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மனைவி அளித்த புகாரின்பேரில் டாக்டர் மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த டாக்டர் ராஜ்குமார்( 34.) இவருக்கும் லட்சுமிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை அபிநயா( 30 ) ஆகியோருக்கு, கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. பெண் வீட்டில் 10 லட்சம் ரூபாய் பணம், கார், 100பவுன் நகை வழங்கினர். இந்நிலையில், டாக்டர் ராஜ்குமாரும், அவரது தாய், தந்தை உறவினர்கள் 8 பேரும் சேர்ந்து அபிநயாவிடம் கூடுதலாக 250 பவுன் நகை, 1.5 கோடி ரூபாய் பணம் வரதட்சனையாக கேட்டு கொடுமைப்படுத்தினர். அபிநயா கொடுத்த புகாரின் அடிப்படையில் டாக்டர் ராஜ்குமார், அவரது பெற்றோர், உறவினர் உட்பட 9 பேர் மீது தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!