முன்னாள் ராணுவவீரரிடம் மோசடி செய்த நபரிடமிருந்து பணத்தை மீட்ட காவல்துறை

முன்னாள் ராணுவவீரரிடம் மோசடி செய்த நபரிடமிருந்து பணத்தை மீட்ட  காவல்துறை
X

பைல்

கடன் தருவதாக மோசடி செய்த வடமாநில நபரிடமிருந்து மீட்ட பணத்தை போடி முன்னாள் ராணுவவீரரிடம் தேனி எஸ்.பி. வழங்கினார்

போடி முன்னாள் ராணுவவீரர் ஜெயகாந்தனிடம் மொபைல் வழியாக பேசிய நபர், அவருக்கு இணைய வழியில் வங்கி கடன் பெற்றுத்தருவதாக கூறியுள்ளார். பின்னர் கடன் அப்ரூவலுக்காக 74 ஆயிரத்து 600 ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால் கடனும் பெற்றுத்தரவில்லை. அப்ரூவலுக்கு வாங்கிய பணத்தையும் தராமவ் மோசடிசெய்துள்ளார்.

இது குறித்து ஜெயகாந்தன், தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவிடம் புகார் செய்தார். இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய விசாரணையில், ஹரியானா மாநிலம், இந்தியன் வங்கி கிளையில், முன்னாள் ராணுவவீரர் செலுத்திய பணம் இருந்ததை கண்டறிந்து மீட்டனர். பின்னர் இந்த பணத்தை எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, முன்னாள் ராணுவ வீரரிடம் வழங்கினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!