வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த தம்பதி : தேனி போலீஸார் விசாரணை

வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த தம்பதி : தேனி போலீஸார்  விசாரணை
X

விசாரணை (மாதிரி படம்) 

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 12.50 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவியிடம் தேனி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்தவர் பிரேம்ஆனந்த். இவரது மனைவி பரமேஷ்வரி. இவர்கள் இருவரும் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி 12.50 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த தேனி பங்களாமேட்டை சேர்ந்த ராம்பிரசாத்(32,) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story