தேனி மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், வீடுகள் இரவு நேர கண்காணிப்பு தீவிரம்..!
தேனி எஸ்.பி அலுவலகம் (கோப்பு படம்)
தேனி மட்டத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தும் விதமாக காவல்துறையினர் இரவு நேர ரோந்துப்பணிகளி முடிக்கிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து தேனி எஸ்.பி., அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் எஸ்.பி., பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, திருட்டு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவேன் என கூறியிருந்தார். இதனால் இதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. குற்றத்தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், நகைகடைகள், குடியிருப்பு பகுதிகளில் இரவு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இரவில் ரோந்து செல்லும் போலீசார் ஒவ்வொரு இடத்திலும் வைக்கப்பட்டுள்ள பீட் நோட்டில் கையெழுத்து போட வேண்டும். தற்போது இந்த பீட் நோட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றை எஸ்.பி., நேரடியாக கண்காணிக்கிறார். குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பலநுாறுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், அனைத்து குடியிருப்பு பகுதிகளில் இந்த பீட் நோட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
தெருவிளக்குகள் சில இடங்களில் சமூக விரோதிகளால் உடைக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதி இருள்சூழ்ந்து விடுகிறது. இது போன்ற இடங்களில் சிறப்பு கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. தவிர இரவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது, கஞ்சா விற்பனை செய்வது, இதர சமூக விரோத செயல்களை தடுக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu