தேனியில் பொதுமக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

தேனியில் பொதுமக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
X

தேனி சமதர்மபுரத்தில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மக்களிடம் சமூக குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தேனி போலீசார் சமூக குற்றங்களில் இருந்து மக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனி நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தேனி இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீஸ் குழுவினர் இன்ஸ்பெக்டர் ஜீப்பில் உள்ள ஒலிபெருக்கி மூலம் நகரின் முக்கிய சந்திப்புகளில் வாகனத்தை நிறுத்தி பிரசாரம் செய்கின்றனர்.

அதில் பெண்கள் செயின் பறிப்புகளில் இருந்து எப்படி தப்புவது, விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது எப்படி நகைகளை பாதுகாப்பாக கொண்டு சென்று திரும்ப வருவது, வீடுகளில் எப்படி திருட்டு குற்றங்களை தடுப்பது, அதேபோல் பாலியல் தொல்லைகளில் இருந்து எப்படி குடும்ப பெண்களும், மாணவிகளும் தங்களை பாதுகாத்துக் கொள்வது, பாலியல் குற்றங்களுக்கு என்ன தண்டனை, போக்குவரத்தின் போது, விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்பது உட்பட பல்வேறு விஷயங்களை விரிவாக விளக்கி கூறி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தேனி போலீசாரின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!