தேனி மாவட்டத்தில் காவல் உதவி செயலி குறித்து போலீசார் விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் காவல் உதவி செயலி குறித்து போலீசார் விழிப்புணர்வு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள் அவசர காலங்களில் காவல்துறையின் மூலம் உடனடி உதவி மற்றும் இதர சேவைகளை பெற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய காவல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

பெண்கள் மற்றும் இதர பயனாளிகள் அவசர காலங்களில் இச்செயலியில் உள்ள _"சிவப்பு நிற அவசரம்"_ என்ற பொத்தனை அழுத்துவதன் மூலம் பயனாளர்களின் விபரம், தற்போதைய இருப்பிட விபரம் உள்ளிட்ட தகவல்களை குறுகிய அளவிலான வீடியோ கட்டுப்பாட்டு அறையின் மூலமாக பெறப்பட்டு உடனடியாக துரித சேவை வழங்கப்படுகிறது.

இக்காவல் உதவி செயலியினை பெற Google Play Store,App Store மற்றும் போலீஸ் QR Code வழியாக ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அவசர காலங்களில் தேனி போலீஸ் கட்டுப்பாட்டு அறை-04546-250100, ஹலோ போலீஸ் தேனி-8870985100, சைபர்கிரைம் இலவச உதவி எண்-1930, சைபர்கிரைம் காவல் நிலைய உதவி எண்கள்-04546-294042, 04546-294043, http://cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என தேனி எஸ்.பி., பிரவிண் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் பொதுமக்கள் "காவல் உதவி செயலியினை" பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!