தேனி மாவட்டம் போடியில் கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் கைது

தேனி மாவட்டம் போடியில் கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் கைது
X

போடியில் கஞ்சா விற்ற மூன்ற பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், போடியில் டவுன் இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, சரவணன் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து சென்றனர்.

கோடாங்கிபட்டி அசேன் உசேன் தெருவை சேர்ந்த சரஸ்வதி, போடி கீழத்தெருவை சேர்ந்த பஞ்சம்மாள், மற்றும் செல்வராணி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

மூவரிடம் இருந்தும் இரண்டரை கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றினர். இவர்கள் மூவரும் பள்ளி, கல்லுாரி வாசல்களில் கடை போட்டு, மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் நீண்ட நாட்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், இவர்கள் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.,க்கு பரிந்துரை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai future project