டீக்கடை நடத்தி வந்த வாலிபர் அடித்துக் கொலை

டீக்கடை நடத்தி வந்த வாலிபர் அடித்துக் கொலை
X
Police are searching for the person who killed in Kamayakaguntanpatti

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிழக்கு வெளி வீதியில் வசித்து வந்தவர் அழகுபகவதி, 42. இவர் தன் மனைவி மீனாவுடன் அந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் மனைவியுடன் சில தினங்களாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து சாலைகளில் சுற்றி திரிந்தார். இன்று அதிகாலை பெரிய கருப்பசாமி கோவில் அருகே உள்ள சாலையில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்ய பயன்படுத்திய மண்வெட்டியை கைப்பற்றிய போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!