தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தேனி மாவட்ட மக்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தேனி மாவட்ட மக்களுக்கு காத்திருக்கும்  இன்ப அதிர்ச்சி
X

தேனி கலெக்டருடன் மாவட்ட வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள்.

வரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தேனி மாவட்ட மக்களுக்கு வணிகர்கள் இன்ப அதிர்ச்சி தரக்காத்திருக்கின்றனர்

கொரோனா தடுப்பூசி நடைபெறவுள்ள ஞாயிற்றுக்கிழமை(நவ .21) தடுப்பூசி போட்டால் அந்த சான்றினை காட்டி பொருட்கள் வாங்குபவர்களுக்கு 2 முதல் 5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் தேனி மாவட்ட நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமினை சிறப்பாக நடத்துவது தொடர்பாக கலெக்டர் முரளீதரன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் தேனி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தடுப்பூசி போடுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போட்டு சான்றிதழ் காட்டுபவர்கள், தேனி மாவட்டத்தில் எந்தக்கடையில், பொருட்கள் வாங்கினாலும் 2 முதல் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அந்த சலுகை உண்டு என அறிவித்துள்ளனர். வணிகர் சங்க பேரவையின் இந்த அறிவிப்பிற்கு மாவட்ட நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!