உத்தமபாளையம் அருகே தோட்டக்காவலாளி கொலை

உத்தமபாளையம் அருகே தோட்டக்காவலாளி கொலை
X
உத்தமபாளையம் அருகே தோட்டக்காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை

உத்தமபாளையம் அம்மாபட்டியை சேர்ந்த தோட்டக்காவலாளி செல்வம்( 48.) இவரது நண்பர் மணிகண்டன்( 29.) இவர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். போதையில் இருவரும் தகராறு செய்துள்ளனர். மணிகண்டன் தன் நண்பர் செல்வத்தை தாக்கி உள்ளார். கீழே விழுந்த செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துடன் தோட்டத்து வீட்டில் போய் படுத்த செல்வம் உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!