"முல்லை பெரியாறு ஒரு உண்மை" சிறப்பு புத்தகம் தமிழகம் முழுவதும் வழங்க திட்டம்
முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணையின் முழு உண்மைகள் குறித்த கையேடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த விவசாய சங்க நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய உள்ளதாக தெரிவி்த்தனர்.
ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை குறித்து கேரள மக்கள் புரிந்து வைத்துள்ள அளவு, தமிழக மக்களோ, பத்திரிக்கையாளர்களோ, அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ புரிந்து கொள்ளவில்லை. இது மிகவும் வேதனையான விஷயம். முல்லை பெரியாறு அணையின் வடிவமைப்பு எப்படி உள்ளது. இப்போது அதற்கு என்ன பிரச்னை என்பது குறித்து முல்லை பெரியாறு அணை குறித்த விரிவான விளக்கங்கள் கொண்ட கையேட்டினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். முல்லை பெரியாறு ஒரு உண்மை என்ற கையேடு தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக முல்லை பெரியாறு நீரினால் பலன் பெறும் ஐந்து மாவட்டங்களில் முதலில் இந்த கையேடு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக பத்திரிக்கை நண்பர்கள், சென்னையில் உள்ள பத்திரிக்கை நண்பர்கள் என பலருக்கும் இது பற்றிய முழு விவரம் தெரியவில்லை. (சிலர் மட்டும் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்) எனவே பத்திரிக்கையாளர்களுக்கு புரிய வைத்த பின்னரே, அவர்கள் மூலம் மக்களுக்கும் அரசுக்கும் புரிய வைக்க முடியும்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கேரள பத்திரிக்கையாளர்களோ, சாமானியர்களோ முல்லை பெரியாறு அணை பற்றி மிகத்தெளிவாக தெரிந்து, புரிந்து வைத்துள்ளனர். அதே அளவு புரிதலை தமிழகத்திலும் கொண்டு வரவே ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் இந்த கையேடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu