காஷ்மீரின் லே மாவட்டத்தில் குழாய் வழியாக குடிநீர் விநியோகம்

காஷ்மீரின் லே மாவட்டத்தில் குழாய் வழியாக குடிநீர் விநியோகம்
X

காஷ்மீரின் லே மாவட்டம் டொம்சொக் கிராமத்தில் குழாய் நீரை பிடிக்கும் சிறுமி.

குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதை சிறுமியும் அவளது தாயாரும் அதிசயமாக ஏன் பார்க்கின்றார்கள் என்கின்றீர்களா மேலே படியுங்கள் புரியும்.

கடல் மட்டத்தில் இருந்து 13,800 அடி உயரத்தில் வருடம் முழுவதும் மைனஸ் டிகிரி சீதோஷ்ண நிலையில் உள்ள காஷ்மீரின் லே மாவட்டம் டெம்சோக் கிராமத்தில் இந்த படம் எடுக்கப்பட்டது. நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தான் பிரதமரின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் இந்த கிராமத்திற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருடம் முழுவதும் பனிபொழிவதால் இதுபோன்ற பல, லே மாவட்ட கிராமங்களில் குடிநீர் உடனடியாக பனிக்கட்டியாக உறைந்து விடும். பனிக்கட்டியாகி விடும் தண்ணீரை குழாய்களின் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கு அனுப்புவதென்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்தது. பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு வரை இந்த சிக்கலுக்கு யாராலும் விடை காண முடியவில்லை.

மக்களும் தங்கள் வீடுகளில் விழும் பனிக்கட்டிகளை பாத்திரங்களில் பிடித்து வைத்து அவற்றை பால் காய்ச்சுவது போல பனியை காய்ச்சி தண்ணீராக மாற்றி அவை மீண்டும் பனியாக உறைவதற்குள் குடிப்பதற்கும் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தார்கள்.

பிரதமர் மோடி, லே மாவட்டத்தில் 8 இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறுகளை தோண்டி அவற்றில் இருந்து வரும் நீர் உறையாமல் இருக்க பிரம்மாண்டமான பாதாள சோலார் ஹீட்டர்கள் மூலம் சூடாக்கி அங்கிருந்து 350 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள அனைத்து கிராமங்களும் INSULATED PIPES மூலம் கொண்டு சென்று தடையில்லா குடிநீரை வழங்கும் திட்டத்தினை அமல்படுத்தினார்.

அந்த 350 கிலோமீட்டர் தொலைவுவரை உள்ள அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் மக்களில் 90% பேர் இஸ்லாமியர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்தியாவில் 75 ஆண்டுகளாக குடிநீர் குழாய் கூட இல்லாத கிராமங்கள் இருந்துள்ளன. குழாய்களின் வழியாக குடிநீரை அனுப்புவதில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பிரச்னை இருந்து வந்துள்ளது. இப்போது காஷ்மீரின் லே மாவட்டத்தில் மத்திய அரசு இந்த விஷயத்திற்கு தீர்வு கண்டுள்ளது. குழாய் வழியாக குடிநீர் வருவதால் மக்கள் இப்போது குடிநீர் பிரச்னை தீர்ந்து சற்று நிம்மதியுடன் வாழத்தொடங்கி உள்ளனர்.

Tags

Next Story