தேனியில் இருந்து பூதிப்புரம் போறீங்களா...

தேனியில் இருந்து பூதிப்புரம் போறீங்களா...

சேதமடைந்து காணப்படும் பூதிப்புரம் ரோடு.

தேனியில் இருந்து பூதிப்புரம் செல்லும் ரோடு மிகவும் மோசமாக சேதமடைந்து காணப்படுகிறது.

தேனியில் இருந்து பூதிப்புரம் செல்லும் ரோடு மிகவும் மோசமாக சேதமடைந்து உள்ளதால், இதில் பயணிக்கும் மக்கள் மிகுந்த உடல் உபாதைகளில் சிக்குகின்றனர்.

தேனியில் இருந்து பூதிப்புரம் செல்லும் ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த ரோட்டின் வழியாக ஆதிபட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை கோடாங்கிபட்டியுடன் இணைக்கிறது. இந்த ரோட்டில் சென்று மதுரை- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து போடி செல்லலாம். மிகவும் போக்குவரத்து முக்கியத்துவம் மிகுந்த இந்த இணைப்புச்சாலை நெருக்கடியான நேரங்களில் மிகச்சிறந்த மாற்றுச்சாலையாகவும் உள்ளது.

இந்த ரோடு மிக, மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகிறது. சேதமடைந்து என்பதை விட சில இடங்களில் நொறுங்கிக் கிடக்கிறது என்றே கூறலாம். இந்த ரோட்டில் டூ வீலரிலோ பஸ்சிலோ பயணம் செய்தால், மூட்டு வலி, முதுகுவலி, கழுத்து வழி, இடுப்பு வலி என பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். பலர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். நோயாளிகளோ, கர்ப்பிணிகளோ இந்த ரோட்டில் பயணிக்கவே முடியாது. அந்த அளவு மிகவும் நெருக்கடியான சூழலில் இந்த ரோடு உள்ளது.

இதனை சீரமைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. இதனால் மக்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டால் நல்லது எனவும் மக்கள் விரும்புகின்றனர்.

Tags

Next Story