முல்லைப்பெரியாறு அணை உரிமை காக்க குமுளியில் பெருந்திரள் முற்றுகை

முல்லைப்பெரியாறு அணை உரிமை காக்க குமுளியில் பெருந்திரள் முற்றுகை
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.

முல்லைப்பெரியாறு அணைக்காக செப்.22ம் தேதி குமுளியில் பெருந்திரள் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

முல்லைப்பெரியாறு அணைக்காக செப்.22ம் தேதி குமுளியில் பெருந்திரள் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக விஷம பிரச்சாரங்களை செய்து வரும் கேரள மாநில காங்கிரஸ் கட்சி, இடதுசாரி கட்சிகள், பாரதிய ஜனதா கட்சி, கத்தோலிக்க இளைஞர் இயக்கம், கத்தோலிக்க காங்கிரஸ், ஆர்எஸ்பி கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, ஆகிய கட்சிகளை கண்டித்தும், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, கேரளா மக்களவை உறுப்பினர்களான டீன் குரியா கோஸ், ஹைபி ஈடன், பென்னி பெஹனன், பிரேமசந்திரன், ராஜ்யசபா உறுப்பினர்களான ஹாரிஸ் பிரான், அல்போன்ஸ் கண்ணந்தானம் (ராஜஸ்தான்) மற்றும் கேரள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வி.டி.சதீஷன் ஆகியோரை கண்டித்தும் தமிழக விவசாயிகள் குமுளியில் மாபெரும் விவசாயிகள் திரள் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.

இடம்-குமுளி எல்லையில் வரும் செப்டம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கும் இந்த போராட்டத்தில் சங்கத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். எங்கள் ஆதரவு அமைப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா