விலை வீழ்ச்சியால் சின்னமனூரில் இலவசமாக வெங்காயம் அறுவடை செய்ய அனுமதி

விலை வீழ்ச்சியால் சின்னமனூரில் இலவசமாக வெங்காயம் அறுவடை செய்ய அனுமதி
X

வாழைத்தோட்டத்திற்குள் விளைந்திருந்த வெங்காயத்தை இலவசமாக எடுத்துச் செல்ல அறுவடை செய்யும் விவசாயிகள்.

வெங்காயம் விலை வீழ்ச்சியால் மனம் உடைந்த விவசாயி தனது தோட்டத்தில் விளைந்திருந்த வெங்காயத்தை இலவசமாக அறுத்துச் செல்ல அனுமதித்தார்.

தேனி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் ஒரு கிலோ வெங்காயத்தை கிலோ 7 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். வெங்காயம் அறுவடை கூலி, பதப்படுத்துதல், மூடை போடுதல், சந்தைக்கு கொண்டு வருதல் ஆகிய செலவுகளை ஒப்பிடும் போது கிலோ 7 ரூபாய்க்கு சின்னவெங்காயத்தை விற்றால் விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகவில்லை. இதனால் மனம் வெறுத்த சின்னமனுார் விவசாயி பால்ராஜ், தனது தோட்டத்தில் விளைந்திருந்த வெங்காயத்தை மக்கள் இலவசமாக அறுத்துச் செல்ல அனுமதித்தார். வாழைக்கு ஊடு பயிராக இவர் வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். விலை வீழ்ச்சியால் வாழைக்கன்றுகளுக்கு சேதம் ஏற்படாமல் வெங்காயத்தை அறுவடை செய்து கொண்டு செல்ல அனுமதித்தார். பொதுமக்களும் கூட்டம், கூட்டமாக சென்று தங்களுக்கு தேவையான அளவு சின்ன வெங்காயத்தை அறுத்துச் சென்றனர்.

Tags

Next Story