பெரியாறு, வைகை நீர்மட்டம் உயர்வு- அருவிகளில் கொட்டுது வெள்ளம்
மேகமலைப்பகுதியில் பெய்யும் மழையால் சுருளிஅருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Vaigai Dam Water Level Today -தேனி மாவட்டத்தில் சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மழை பெய்து வருகிறது. பெரியாறு அணையில் 15 மி.மீ., தேக்கடியில் 20 மி.மீ., மழை பதிவானது. தேனி மாவட்டத்தின் மற்ற சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. குறிப்பாக மேகமலை பகுதிகளில் பெய்த மழையால் சின்னசுருளி மற்றும் சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கும்பக்கரை அருவியிலும் திடீர் வெள்ளம் வருவதால் பயணிகள் குளிக்க வர வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த மழையால் வைகை அணைக்கும், பெரியாறு அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணை நீர் மட்டம் 70.01 அடியாக உள்ளது. இதன் மொத்த நீர் மட்ட உயரம் 71 அடியாகும். முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 136.25 அடியை எட்டி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1800 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 933 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் நீர் மட்டம் மேலும் உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu