முதல்போக நெல் சாகுபடிக்கு இன்று பெரியாறு அணை திறப்பு

முதல்போக நெல் சாகுபடிக்கு இன்று பெரியாறு அணை திறப்பு
X

முல்லைப்பெரியாறு அணை.

முதல்போக நெல் சாகுபடிக்காக இன்று காலை 10.30 மணிக்கு பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 200 அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 130 அடிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் இன்று கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலத்தில் முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஏற்கனவே கம்பம் பள்ளத்தாக்கு குடிநீருக்கு அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கூடுதலாக 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் நாற்றங்கால் வளர்ப்பு பணிகளுக்கு பயன்படும். நடவு பணிகள் தொடங்கும் போது திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும். அதேபோல் வைகை அணையில் நாளை காலை தண்ணீர் திறக்கப்படுகிறது. திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள நிலங்களில் இருபோக நெல் சாகுபடிக்காக இந்த தண்ணீர் திறக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture