தேனி மாவட்ட கலெக்டர் வாக்களித்தார்

தேனி மாவட்ட கலெக்டர் வாக்களித்தார்
X

தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பெரியகுளம் தொகுதியில் வாக்களித்தார்.

தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 18 வயது நிரம்பிய முதல் வாக்காளர்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் தங்களது வாக்குரிமையை செலுத்தி ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் தேனி மாவட்ட கலெக்டராக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொறுப்பேற்ற கிருஷ்ணனுண்ணி இன்று முதன் முதலில் தேனி மாவட்டத்தில் வாக்களித்தார். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடபுதுப்பட்டியில் உள்ள இந்து முத்தாலம்மன் பள்ளியில் அவர் வாக்களித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!