பெரியகுளம்-கொடைக்கானல் சாலையில் போக்குவரத்துக்கு தடை.. நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு…

பெரியகுளம்-கொடைக்கானல் சாலையில் போக்குவரத்துக்கு தடை.. நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு…
X

பெரியகுளம்- கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து தடை தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையின் அறிவிப்பு.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் பாறைகள் மற்றும் மண் சரிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்வதற்காக சாலை அமைக்கும் பணி மேற்கொண்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சாலை விரிவாக்க பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், கடந்த வடகிழக்கு பருவமழையின் போது பெய்த கனமழையால் அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் போக்குவரத்திற்காக மண் மூட்டைகளை அடுக்கி தற்காலிக பணிகளை மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், மண்சரிவு பாறைகள் உள்ள இடத்தில் நிரந்தர பணிகளை மேற்கொள்வதற்காக சரிந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியை மேற்கொண்ட போது மீண்டும் சாலையில் பாறைகள் மற்றும் கற்கள் உருண்டு விழுந்தது.

மேலும், பருவமழையின் போது முழுமையாக துண்டிக்கப்பட்ட அதே இடத்தில் சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் நிரந்தரப் பணிகளை மேற்கொள்வதால் தொடர்ந்து பாறைகள் மற்றும் மண் சரிந்து வருவதை கருத்தில் கொண்டு பெரியகுளம் பகுதியில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையை தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை செய்து உள்ளதாகவும் பணிகள் முடிவடைய ஒரு மாத காலத்திற்கு மேல் ஆகும் என தெரிவித்தனர்.

இதனால் பெரியகுளம் பகுதியில் இருந்து அடுக்கம், சாமக்காடு, பாலமலை, பேத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் விவசாய விளைபொருட்களை பெருமாள்மலை, வத்தலகுண்டு சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், அடுக்கம் சாலையில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் செல்லவும் நெடுஞ்சாலை துறையினர் தடை விதித்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!