ஒரே நாளில் 9அடி உயர்ந்த சோத்துப்பாறை அணை

ஒரே நாளில் 9அடி உயர்ந்த சோத்துப்பாறை அணை
X

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒரே நாளில் 9அடி சோத்துப்பாறை அணை உயர்ந்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. கோடை காலம் துவங்கியதில் இருந்தே நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரியத் தொடங்கியது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை இல்லாததால் நீர் வரத்து முற்றிலும் நின்றது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த கன மழையால், சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று காலை 104.63அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று ஒரே நாளில் 9அடி அதிகரித்து 113.16அடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 78.99 மி.கன அடியாக இருக்கிறது.நீர்வரத்து 133 அடியாக உள்ளது. அணையில் இருந்து பெரியகுளம் பகுதி குடிநீர் தேவைக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கோடையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் பாசன பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா