பெரியகுளம் வாக்குசாவடியில் முறைகேடு- சாலை மறியல்
![பெரியகுளம் வாக்குசாவடியில் முறைகேடு- சாலை மறியல் பெரியகுளம் வாக்குசாவடியில் முறைகேடு- சாலை மறியல்](https://www.nativenews.in/h-upload/2021/04/06/1006909-img-20210406-wa0002.webp)
பெரியகுளம் புத்தர் நடுநிலை பள்ளியில் உள்ள 107வது வாக்குச்சாவடியில் முறைகேடு நடந்ததாக கூறி வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது பெரியகுளம் நகராட்சி தென்கரையில் புத்தர் நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்கள் 104, 105, 107 மற்றும் 107A ஆகிய 4வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. இதில் 107வது வாக்குச்சாவடியில் மொத்தமுள்ள 1350 வாக்குகளில் இரண்டு வாக்குசாவடிகளாக பிரித்து 600 வாக்குகள் ஒரு வாக்குச் சாவடியிலும் (107), 750 ஒரு வாக்குச் சாவடியிலும் (107A) பிரிக்கப்பட்ட நிலையில் 1200 முதல் 1350 வரை உள்ள 150 வாக்காளர்களுக்கு வாக்கு பட்டியலில் இடமில்லை எனக் கூறி அழைக்கழிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக சுமார் 1மணி நேர தாமதத்திற்கு பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரியகுளம் ஆண்டிபட்டி சாலையில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வாக்காளர்களை அப்புறப்படுத்தினர்.வாக்குப் பதிவு மையம் அருகே போராட்டம் நடைபெற்றதால் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu