பெரியகுளம் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் சரவணக்குமார் இன்று தனது பரப்புரையை பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பகுதியில் உள்ள 16வது வார்டு முதல் 30வது வார்டு வரை உள்ள அனைத்து பகுதிகளில் திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். நகர் பகுதியில் பல இடங்களில் பெண்கள், ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும், வெடி வெடித்தும் மேளங்கள் முழங்க திமுக வேட்பாளரை வரவேற்றனர்.
அப்போது அங்கு கூடி இருந்தவர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அரசு வேலைகளில் வெளி மாநிலத்தவரை அதிகம் அமர்த்துவதற்கு அதிமுக அரசு சட்டதிருத்தங்களை கொண்டு வந்துள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு வேலைகள் தமிழ்க இளைஞர்களுக்கு வழங்க உறுதிப்படுத்தப்படும். மேலும் தமிழகத்தில் நிறப்படாமல் உள்ள 3.50 லடசம் அரசு வேலைகள் தமிழக இளைஞர்களுக்கு வழங்கப்படும், பெரியகுளம் தென்கரை 27,28,29 வார்டுகளில் மழை காலங்களில் வராகநதியில் ஏற்படும் வெள்ளநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தடுப்பு சுவர் கட்டப்படும் எனவும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்து திட்டங்களும் மக்களிடம் கொண்டு சேர்த்து அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து முடிப்பேன் என வாக்குறுதி கொடுத்து திமுக வேட்பாளர் சரவணக்குமார் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த பரப்புரையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்று திமுக தொண்டர்கள் என ஏராலமானோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu