ஊரடங்கு: வெளியில் சுற்றித் திரிந்த நபர்களுக்கு நூதன முறையில் அறிவுரை

ஊரடங்கு: வெளியில் சுற்றித் திரிந்த நபர்களுக்கு நூதன முறையில் அறிவுரை
X

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் காரணமாக முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரியும் நபர்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களில் தேவையின் சுற்றித் திரிந்த நபர்களை பெரியகுளம் காவல்துறையினர் பிடித்து அவர்களிடம் இருந்த இரு சக்கர வாகனங்கள் , மற்றும் கைப்பேசிகளை பறி முதல் செய்தனர்.

அவர்களை பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சமூக இடைவெளியுடன் அமரச் செய்து பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் அவர்களின் ஆலோசனைப்படி, காவல் சார்பு ஆய்வாளர் ராம பாண்டி அவர்கள் கொரோனா பரவல், மற்றும் பாதிப்புகள் குறித்த அறிவுரைகள் மற்றும் குடும்பத்தினர்களையும், தங்களையும், எவ்வாறு காத்துக் கொள்வது, என்பது பற்றியும், கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அரசு காட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு காலத்தில் தயவு செய்து யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொண்டார். அறிவுறுத்தலுக்கும் பின் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் கைப்பேசிகள் உடமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!