இலவச வாஷிங்மெஷின் அறிவிப்பு-சரத்குமார் கிண்டல்

இலவச வாஷிங்மெஷின் அறிவிப்பு-சரத்குமார் கிண்டல்
X

இலவசமாக வாஷிங்மெஷின் தருகிறேன் என்பவர்களிடம் இலவச சலவை பவுடரையும் கேளுங்கள் என தேனியில் சரத்குமார் கிண்டலாக பேசினார்.

சமக கட்சி தலைவர் சரத்குமார் இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். மக்கள் நீதி மையம் கூட்டணி சார்பில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பாண்டியராஜனை ஆதரித்து தேனி அல்லிநகரம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் அவர் தேர்தல் பரப்புரை செய்தார்.முன்னதாக பெரியகுளத்தில் பேசிய சரத்குமார், அடிப்படை சுகாதாரத்தைக்கூட சரியாக செய்யாமல் உள்ளது திராவிட கட்சிகளின் நிலை. திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பல இடங்களில் காவல்துறை அதிகாரிகளை பார்த்து ஆட்சிக்கு வந்ததும் உங்களை பார்த்துக்கொள்கிறேன் என மிரட்டி வருவதாக குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து தேனி அல்லிநகரத்தில் பரப்புரை செய்த சரத்குமார், இலவச திட்டங்கள் வழங்கி உழைப்பவர்களை வேலை செய்யவிடாமல் கெடுக்கிறார்கள். இலவச வாஷிங்மெஷின் தருவதாக கூறுகிறார்கள், அதற்கான மின் கட்டணம் மற்றும் இலவச சலவை பவுடரையும் கேளுங்கள். சாதாரணமாகவே துணி துவைத்தால் தான் உடலுக்கு நல்லது. இதில் 2 கிமீ தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வந்து இவர்கள் தரும் வாஷிங்மெஷினில் ஊற்றி துணி துவைக்க வேண்டுமா? என அதிமுக தேர்தல் அறிவிப்பை கிண்டல் செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!