ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரானோ உறுதி

ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரானோ உறுதி
X

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் தென்கரை பகுதியில் பிரௌசிங் கடை நடத்தி வரும் நபருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனைவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் வசித்து வந்த ஸ்டேட் பேங்க் காலனி, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. அங்கு கீழ வடகரை ஊராட்சி சார்பாக கிருமி நாசினி மருந்துகள் தெளித்தும், தடுப்பு கட்டைகள் அமைத்தும் வெளிநபர்கள் உள்ளே செல்லாத வகையில் மூடப்பட்டுள்ளன. இதனிடையே ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை தேனி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags

Next Story
ai solutions for small business