ஆ.ராசா புகைப்படத்தை எரித்து அதிமுக சாலை மறியல்

ஆ.ராசா புகைப்படத்தை  எரித்து அதிமுக சாலை மறியல்
X

பெரியகுளத்தில் திமுகவை சேர்ந்த ஆ.ராசாவின் புகைப்படத்தை தீயிட்டு எரித்து அதிமுகவினர் சாலை மறியல் செய்தனர்.

திமுக துணைப் பொதுசெயலாளர் ஆ.ராசா அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுகவினர் இன்று ஆ.ராசா புகைப்படத்தை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரியகுளம் தென்கரையில் உள்ள காந்திசிலை முன்பாக கூடிய சுமார் நூற்றுக்கணக்கான அதிமுகவினர், ஆ.ராசாவின் புகைப்படத்தை துடைப்பம், செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதற்காக அவரது பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடியிருந்தவர்களை கலைத்தனர்.இதனால் திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்