3வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்: ஓபிஎஸ்

3வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்: ஓபிஎஸ்
X
அறுதிப் பெரும்பான்மை பெற்று அதிமுக மூன்றாம் முறையாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என பெரியகுளத்தில் ஓபிஎஸ் கோவில்களில் வழிபாட்டிற்குப் பின் பேட்டி.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 7 மணிக்கு முடிவடையும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பெரியகுளம் தொகுதி வேட்பாளர் முருகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடத்த இருந்த நிலையில், இன்று ரத்து செய்யப்பட்ட பின்பு அவரது இல்லத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் பெரியகுளம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் ஆஞ்சநேயர் கோவில் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டபோது,' தமிழகத்தில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story
why is ai important to the future