ஓபிஎஸ் தம்பி காலமானார்…அதிமுகவினர் இரங்கல்!

ஓபிஎஸ் தம்பி காலமானார்…அதிமுகவினர் இரங்கல்!
X
ஓ.பி.எஸ்.சு க்கு 3 தம்பிகள்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

இவர் தேனி மாவட்டம், பெரியகுளம் எனும் ஊரில் ஓட்டக்கார தேவர் மற்றும் பழனியம்மாள் நாச்சியார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்னும் மனைவியும், இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அத்துடன் ஓபிஎஸ்சுக்கு ஓ.ராஜா, ஓ.பாமுருகன் உள்பட 3 தம்பிகள் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மூன்றாவது தம்பி பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று நேற்று இரவு வீடு திரும்பிய நிலையில் இன்று காலமானார்.

ஓபிஎஸ் வீட்டில் நிகழ்ந்த இந்த துக்க நிகழ்வுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருவதுடன் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது