தேனியில் கூடுதல் மகிளா நீதிமன்றம் திறப்பு

தேனியில் கூடுதல் மகிளா நீதிமன்றம் திறப்பு
X

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கூடுதல் மகிளா நீதிமன்றம் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகிளா நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக கூடுதல் மகிளா நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.தொடர்ந்து கூடுதல் மகிளா நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி விஜயா உள்பட நீதிபதிகள் குத்துவிளக்கு ஏற்றி வழக்கு விசாரணையை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் தேனி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட எஸ்பி., சாய்சரண் தேஜஸ்வி மற்றும் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!