சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி
X

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 17வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி வடகரை 1வது வார்டுக்கு உட்பட்ட வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் முருகேசன் (17). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதியுற்ற இச்சிறுவனுக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரியகுளத்தில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதிகளில் மேலும் தொற்று பரவாமல் தடுக்க சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது