ஓபிஎஸ் சொத்துக்களை மீட்போம்- உதயநிதிஸ்டாலின்

ஓபிஎஸ் சொத்துக்களை மீட்போம்- உதயநிதிஸ்டாலின்
X

திமுக ஆட்சிக்கு வந்தால் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சொத்துக்களை மீட்டு பொதுமக்களிடம் ஒப்படைப்போம் என பெரியகுளத்தில் உதயநிதிஸ்டாலின் கூறினார்.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சிக்காக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் இரண்டு தினங்களாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். இதில் பெரியகுளத்தில் பிரச்சாரம் செய்வதற்காக வருகை தந்தார். அவரை வரவேற்க காத்திருந்த திமுகவினர், உதயநிதி ஸ்டாலின் வந்ததும் திடீரென தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்தனர். மேலும் தேனி எம்.பிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.பின்னர் சாலையில் அமர்ந்தவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து பெரியகுளம் காந்தி சிலை அருகே பேசிய உதயநிதி ஸ்டாலின், பெரியகுளத்தில் ஒரு சாதாரண டீக்கடை வைத்திருந்த துணைமுதல்வர் ஓபிஎஸ், இன்று பல ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். தமிழகத்தில் சொத்து வாங்க இடமில்லை என்று கேரளாவில் அண்மையில் இரண்டாயிரம் கோடிக்கு சொத்து வாங்கி இருப்பதாக அங்குள்ள முன்னணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.எனவே இவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுப்பதற்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தல் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை எல்லாம் மீட்டு பொதுமக்களிடம் ஒப்படைப்பதாக கூறினார்.

Tags

Next Story