இந்திய இறையாண்மையை காக்க மாணவர்சங்கம் உறுதிமொழி

இந்திய இறையாண்மையை காக்க மாணவர்சங்கம் உறுதிமொழி
X

தேனியில் மகாத்மா காந்தியின் 73வது நினைவுநாளை முன்னிட்டு மாணவர்கள் சங்கம் சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் 73வது நினைவுநாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தலைவர்கள் பலர் காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இந்திய இறையாண்மையை காத்திட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றனர்.

பெரியகுளம் தென்கரை மூன்றாந்தலில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய இந்திய மாணவர் சங்கத்தினர், இந்தியாவின் இறையாண்மையை காத்திட வேண்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்திடவும், மதச்சார்பின்மையை பாதுகாத்திடவும், சாதி, மதவாதத்திற்கு எதிராகவும், இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் , பாதுகாத்திட உறுதிமொழி ஏற்றனர். மேலும் காந்தி சிலை முன்பாக புதிய வேளாண்மை சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக் கோரியும் விவசாயத்தை காத்திட கோரி கோஷமிட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!