வீட்டில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்

வீட்டில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்
X
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்து, தனது வீட்டில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தேனி அல்லிநகரம் சக்கரைப்பட்டியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன், 39, காட்டுராஜா 35. கஞ்சா வியாபாரிகளான இவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் படி, போலீஸ்காரர்கள் ராஜா, வாலிராஜன், ஸ்ரீதர் ஆகியோர் ஒண்ணரை கிலோ கஞ்சா வாங்கினர். இந்த கஞ்சாவை போலீஸ்காரர் ராஜா வீட்டில் பதுக்கி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே விசாரணைக்கு உத்தரவிட்டா். கூடுதல் எஸ்.பி., கார்த்திக் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி எஸ்.பி.,யிடம் அறிக்கை கொடுத்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் கட்டுப்பாட்டு அறைக்கும், போலீசார் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டனர். கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த போலீஸ்காரர் ராஜா மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Tags

Next Story
ai marketing future