பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டரை  மிரட்டியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பெரியகுளத்தை சேர்ந்தவர் துரை. இவர் சில நாட்களுக்கு முன்னர் விசாரணை ஒன்றுக்காக பெரியகுளம் ஸ்டேஷனுக்கு வந்த போது, இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்தார். இதனால் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். எஸ்.பி., பரிந்துரையை ஏற்று கலெக்டர் முரளீதரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறையில் உள்ள துரையிடம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி