தேனி 14வது வார்டு வேட்பாளர் நாகராஜிடம் தெருக்குழாய் வேண்டி மக்கள் கோரிக்கை

தேனி 14வது வார்டு வேட்பாளர் நாகராஜிடம் தெருக்குழாய் வேண்டி மக்கள் கோரிக்கை
X
தேனி 14வது வார்டு பகுதியில் காங்., வேட்பாளர் நாகராஜ் ஓட்டு சேகரித்தார்.
தேனி 14வது வார்டில் மீண்டும் முன்பு போல் தெருக்குழாய் வசதி வேண்டும் என காங்., வேட்பாளர் நாகராஜிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

தேனி நகாராட்சி 14வது வார்டு காங்., வேட்பாளர் நாகராஜ், அவரது கட்சியினர், உறவினர்கள் இன்று வீடு, வீடாக ஓட்டு கேட்டு சென்றனர்.

அப்போது அவரிடம் பேசிய பொதுமக்கள், 'முன்புபோல் தெருக்களில் தெருக்குழாய் வசதி வேண்டும், வார்டில் உள்ள குப்பைகளை மீண்டும் அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்' என கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து வேட்பாளர் நாகராஜ் கூறுகையில், 14வது வார்டில் போர்வெல் அமைத்து அந்த தண்ணீரை மேல்நிலை தொட்டிக்கு ஏற்றி, அங்கிருந்து குழாய் இணைத்து, ஒவ்வொரு தெருவிலும் மூன்று இடங்களில் தண்ணீர் பிடிக்க ஏற்பாடு செய்திருந்தோம். இதனால் மக்களுக்கு மிகுந்த வசதி கிடைத்தது. இடையில் தனி அலுவலர் காலத்தில் இந்த குழாய்களை அகற்றி விட்டனர்.

எனவே மீண்டும் அதேபோல் குழாய் அமைக்க வேண்டும் என மக்கள் கேட்டனர். இப்பகுதியி்ல் நகராட்சி குப்பை கிடங்கு இருந்தது. அதில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டிருந்த குப்பைகளை நாங்கள் பாதி அகற்றிய நிலையில் எங்கள் பதவிக்காலம் நிறைவடைந்து விட்டது. மீதம் குப்பைகளை தனி அலுவலர் பதவிக்காலத்தில் அகற்றாமல் போட்டுள்ளனர். எனவே நான் வெற்றி பெறவும் அந்த குப்பைகளை முழுமையாக அகற்றி தர வேண்டும் என கேட்டனர். நானும் செய்து தருவதாக உறுதி அளித்தேன்' என்றார்.

Tags

Next Story
ai in future education