ஐக்கிய அரசு எமிரேட்ஸ் விரும்ப காரணம் என்ன
பைல் படம்
எமிரேட்ஸில் அனைத்து மதத்தினரையும் காணலாம். அனைத்து மொழிகள் பேசுவோர்களையும் காணலாம். அனைத்து இனங்கள் சாதி சனங்களையும் காணலாம். ஆனால் அங்கே ஒரு மொழி இருக்கிறது. அது எல்லோருக்கும் புரியும். அதுதான் ஒழுங்கமைப்பு என்ற மொழி. சட்டம் சரிசமம் என்ற மொழி. அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்படுவார்கள். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள். மற்ற நாடுகளைப் போல (நான் இன்ன சாதி, நீ அந்த மதம், நான் யார் தெரியுமா? நான் நாட்டவன், நீ வந்தவன்) என்ற பேச்சுக்கு இடம் கிடையாது.
ஐக்கிய அரசு எமிரேட்ஸ் தினமும் தன்னை அபிவிருத்தி செய்ய முயலும் நாடு. தினசரி புதுமைகள் காண நினைக்கும் நாடு. தினசரி உள்கட்டமைப்பை மேம்பாடுத்தும் நாடு.. தினமும் புதிய சாலைகள் அமைக்கும் நாடு.கண் கவரும் தோற்றத்தில் நாட்டை வைக்க அக்கறை செலுத்தும் நாடு..சவுதியிலிருந்து எமிரேட்ஸ் எல்லைக்குள் நுழைந்தும் புதுக் கிரகம் ஒன்றில் நுழைந்தது போல் உணரலாம்.
இங்குள்ள ரோடுகளில் ஒரு துளை இல்லை, ஒரு குழி இல்லை, ஒரு குப்பைத் துண்டைக் கூட பார்க்க முடியாது. நெடுஞ்சாலையில் போக 6 வழிப் பாதைகள், வர 6 வழிப் பாதைகள். பாதை முழுதும் ஒளிரும் விளக்குகள். நேர்த்தியான போக்குவரத்து சமிக்ஞைகள். வேகக் கட்டுப்பாடுகளை எல்லோரும் கடைப்பிடிக்கின்றனர்.
திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்கள். அதி விசேச சேவைகள். எமிரேட்ஸில் எரிபொருள் நிலையங்கள் சிறிய ஸ்மார்ட் கிராமங்கள் போல் இருக்கும். எமிரேட்ஸில் நள்ளிரவில் குடும்பத்துடன் பிக்னிக், ஷாப்பிங் என்று வெளியே சென்றால் அச்சப்பட வேண்டியதில்லை. மிகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நாடு.. அங்கே காவல்துறையைக் நீங்கள் கண்டால் மென்மேலும் தைரியம் வரும். அவர்கள் உங்களுக்கு சேவை செய்வதற்காக, உங்கள் பாதுகாப்பிற்காக உள்ளவர்கள் என்று உணர்வீர்கள்.. எல்லா நாடுகளும் எமிரேட்ஸைப் போல இருக்க வேண்டும் என்றே மக்களும் சுற்றுலாப் பயணிகளும் விரும்புகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu