கண்மாய் உடைந்து கிராமத்திற்குள் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதி

கண்மாய் உடைந்து கிராமத்திற்குள் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதி
X

சீலையம்பட்டி கண்மாய் உடைந்து தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது.

சீலையம்பட்டி கண்மாய் உடைந்து மழைநீர் விளை நிலங்களிலும் கிராமத்திற்குள்ளும் புகுந்ததால் மக்கள் சிரமப்பட நேரிட்டது

தேனி அருகே சீலையம்பட்டி கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் விளைநிலங்களுக்குள்ளும், கிராமத்திற்குள்ளும் புகுந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை சீலையம்பட்டி கண்மாய் உடைந்தது. இந்த வெள்ளநீர் விளைநிலங்களுக்குள்ளும், கிராமத்திற்குள்ளும் புகுந்தது. வி.ஏ.ஓ. முத்துமணி, சமூக ஆர்வலர் சேக்ஸ்மருது தலைமையில் கண்மாய் கரையின் உடைப்பை அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிறிய உடைப்பு ஏற்பட்டதும் கரை அடைக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....