மழையை கண்டாலே அலறும் தேனி சிவராம் நகர் பொதுமக்கள்

மழையை கண்டாலே அலறும் தேனி சிவராம் நகர் பொதுமக்கள்
X

பைல் படம்

மழை பெய்யாதா என ஒட்டுமொத்த தமிழகமும் ஏங்கி தவிக்கும் போது, மழையை கண்டாலே தேனி சிவராம் நகர், கக்கன்காலனி பகுதி மக்கள் அலறுகின்றனர்.

தேனி வால்கரடு மலைப்பகுதி கே.ஆர்.ஆர்., நகரில் தொடங்கி நான்கு கி.மீ., துாரம் நீளமாக செல்கிறது. இது முற்றிலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். வால்கரடு மலையின் ஒரு பகுதியில் சிவராம்நகர் முதல் கக்கன்ஜிகாலனி வரை ஏராளமான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. வால்கரட்டின் மறுபகுதியில் ரோடு செல்கிறது.

சிவராம்நகர், கக்கன்காலனி மிகப்பெரிய குடியிருப்பு பகுதிகள் ஆகும். இங்கு மிகவும் சிறிய வீடுகள் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளது. இதனால் வீட்டில் கழிப்பிடம் கட்டக்கூட இடம் இல்லை. இதனால் இப்பகுதி ஆண்களும், பெண்களும் வால்கரடு மலைப்பகுதியினை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். வால்கரடு மலைப்பகுதி சற்று உயரமாகவும், குடியிருப்பு பகுதிகள் தாழ்வான இடத்திலும் அமைந்துள்ளது.

இதனால் மழை பெய்யும் போது மழைநீர் கழிவுகளை அடித்துக் கொண்டு குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இங்கு கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் சிறியதாக உள்ளன. இதனால் நீர் வேகமாக கடந்து செல்ல வாய்ப்புகள் இல்லை. எனவே இந்த கழிவுநீர் கால்வாய்கள் பொங்கி கழிவுகள் கலந்த மழைநீர் தெருக்களில் ஒடுகிறது. சற்று பலத்த மழை பெய்தால், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் வீட்டை சுத்தம் செய்யும் முன்னர் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு விடுகின்றனர்.

இந்த பிரச்னைக்காக மழையை கண்டாலே அலறுகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய்களை அகலப்படுத்தி, ஆழமாக கட்டி எவ்வளவு மழை பெய்தாலும் கழிவுநீர் கடந்து செல்ல வசதியாக உள்கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்