தமிழக மக்களுக்கு தோலில் பூஞ்சை நோய்கள் பரவும் வாய்ப்பு ?;எச்சரிக்கை தேவை

Fungal Infection in Tamil
Fungal Infection in Tamil-தமிழகத்தில் குறிப்பாக விவசாயிகள் அதிகம் பேர் தோல் பூஞ்சை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அதிகம் வியர்வை தோலில் படிவதாலும், ஈரமான ஆடைகளை அணிவதாலும், அல்லது வேர்வை, ஈரம் படிந்த ஆடைகளை நீண்ட நேரம் உடலில் அணிவதாலும் இந்த பூஞ்சை நோய்கள் பரவும்.
வியர்வையை நீண்ட ஈரத்துடன் வைத்திருக்காமல் அடிக்கடி துடைத்து விடுவது, உலர்த்துவது, ஆடைகளை ஈரமின்றி அணிவது, குளித்தவுடன் உடலை ஈரம் இன்றி துடைத்து விட்டு, நன்கு சலவை செய்யப்பட்ட ஆடைகளை அணிவது முக்கியம். குறிப்பாக கை அக்குள் பகுதிகள், கால் இடுக்குகள், கழுத்துப்பகுதிகளில் ஈரம் படியக்கூடாது. வியர்வை படியக்கூடாது.
இதனை தடுக்க குளித்தவுடன் தோல் டாக்டர்கள் பரிந்துரைக்கும் 'ஆன்டிபங்கல்' பவுடரை போடலாம். அந்த பவுடர் போடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படாது. தவிர பவுடர் வியர்வையினை உறிஞ்சி பூஞ்சை வராமல் தடுத்து விடும். ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் இது பொருந்தும். இந்ந நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் 'இன்டர் டிரைரோ' எனப்படும் தொடைப்பகுதியில் வரும் பூஞ்சை தொற்றுக்களை தடுக்கலாம். தோல் ஈரமாக இருப்பது தவறு அதேபோல் வறட்சியா கவும் இருக்ககூடாது. மஞ்சள், பாசிப்பயறு போன்றவை தோல் வறட்சியை அதிகரிக்கும். தோல் வறட்சியை தடுக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை பயன்படுத்தலாம்.
துவைத்த துணிகளை நிழலில் காயவைக்கும் பழக்கம் தவறானது. கலர் போய் விடும் என்பதை கருத்தில் கொண்டு நிழலில் துவைத்து துணிகளை உலர்த்துகின்றனர். நிழலில் உலர்த்துவதால் துணிகளில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் சாகாது. வெயிலில் உலர்த்தினால் மட்டுமே இவைகள் சாகும். துணிகளை வெயிலில் உலர்த்தி அதன் பின் அணிவதன் மூலம் துணிகள் மூலம் பரவும் தோல் நோய்களை முற்றிலும் தடுக்க முடியும்.
குழந்தைகளுக்கு டயாப்பர் அணிவது தற்போது பிரபலம் ஆகி வருகிறது. குழந்தைகள் சிறுநீர் கழித்திருந்தாலோ, மலம் கழித்திருந்தாலோ அல்லது கழிக்காவிட்டாலோ கூட பரவாயில்லை. இந்த டயாப்பரை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் மாற்றி விட வேண்டும். தவிர டயாப்பரை தொடர்ந்து அணிவித்தல் கூடாது. எங்காவது வெளியில் பயணம் செய்ய வேண்டிய சூழல் வந்தால், வீடுகளில் சில முக்கிய தருணங்களில் மட்டுமே டயாப்பரை அணிவிக்க வேண்டும். மற்ற நேரங்களில் டயாப்பர்களை பயன்படுத்தக்கூடாது.
டயாப்பர் தொடர்ந்து அணிவிப்பதாலும், நீண்ட நேரம் அகற்றாமல் இருப்பதாலும், குழந்தைகளுக்கு 'டயாப்பர் ரேஸிஸ்' பாதிப்பு வரும். அதேபோல் படுக்கை அசுத்தமாகி விடும் எனக்கருதி, குழந்தைகளை ரப்பர் சீட்டில் இரவு முழுவதும் படுக்க வைக்கவே கூடாது. அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வரை தேவைப்பட்டால் ரப்பர் சீட்டில் படுக்க வைக்கலாம்.
எல்லாவற்றையும் விட ஏ.சி., ரூம்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம் குடியிருக்கும் அறையில் சூரிய ஒளிபட வேண்டும். வாசல், கதவு, ஜன்னல்கள் வழியாக 'கிராஸ் வெண்டிலேசன்' கட்டாயம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அறையில் வசிப்பது தான் சரியானது. ஏ.சி., அறையில் வசிப்பது தோல் நோய்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும்.
தோல் நோய்களை தவிர்க்க வைட்டமின் டி.இ.ஏ.,க்கள் அதிகம் தேவை. வைட்டமின் டி அதிகாலை இளம் வெயிலில் கிடைக்கும். இதனால் தான் அதிகாலை வெயிலில் வாக்கிங் செல்ல டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் இ.ஏ., போன்றவைகள் பச்சை காய்கறிகள், மீன் உணவுகள், முட்டை, ஆட்டு இறைச்சிகளில் கிடைக்கும். ஆடு இறைச்சியை விட கல்லீரல், நுரையீரல், சுவரொட்டி, குடல், இரைப்பை சாப்பிடுவதன் மூலம் அதிக வைட்டமின்களை நாம் பெற முடியும். இறைச்சியில் புரோட்டின் சத்து அதிகம் உள்ளது. ஆட்டின் உறுப்புகளில் வைட்டமின்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே தான் உடல் உறுப்புகளை வாங்கி நன்கு சுத்தப்படுத்தி வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது தோல் பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது.
வைட்டமின் சி மிகவும் நல்லது. ஆனால் அரிப்பு, சொரியாசிஸ், கரப்பான், பூஞ்சை நோய்கள் உள்ளவர்கள் வைட்டமின் சி அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. பகலில் வெயிலில் அலைபவர்கள் டாக்டர்கள் பரிந்துரைக்கும் சன்ஸ்கிரீன் லோசனை பயன்படுத்திக் கொள்ளலாம். இளவெயில் மிக நல்லது தான். ஆனால் அதிக வெயிலை தவிர்ப்பதும் நல்ல விஷயம் தான்.
தலைமுடிக்கு டை அடிப்பது தற்போது தவிர்க்க முடியாத விஷயமாக மாறி விட்டது. பொதுவாக டாக்டர்கள் டை அடிப்பதை ஊக்கப்படுத்துவது இல்லை. தற்போது தவிர்க்கமுடியாத விஷயமாகி விட்டதால், சில தரமான கம்பெனி பிராண்டுகளை பரிந்துரைப்போம். டை அடிக்க விரும்புபவர்கள் டாக்டர்களின் ஆலோசனை பெற்று டை அடிப்பது மிகவும் நல்லது. வைட்டமி்ன் பி12, பயோட்டின் சத்து நிறைந்த உணவுகளும் முடி பராமரிப்பிற்கு உதவும். சோற்றுக்கற்றாலை முடி பராமரிப்பிற்கு உதவும். அதனை டாக்டர்கள் ஆலோசனைப்படி குறைந்து அளவு குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் சோற்றுக்கற்றாலை பயன்படுத்தக்கூடாது.
பொதுவாக எண்ணெய்களில் பொறித்த உணவுகள், ஜங்க் புட், புரோட்டா, போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மீனில் உள்ள ஒமேகா பேட்-3 உடலுக்கும், தோலுக்கும் நல்லது என்பதால் டாக்டர்கள் மீன் உணவுகளை பரிந்துரைக்கின்றனர். இது போன்ற எளிய வாழ்வியல் நடைமுறைகளே நல்ல சருமபராமரிப்பிற்கு பெரிதும் உதவும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu