12 ஆண்டுகளுக்கு பின்னர் தேனி வந்த ரயில் என்ஜினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

12 ஆண்டுகளுக்கு பின்னர் தேனி வந்த ரயில் என்ஜினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
X

சோதனை ஓட்டத்தின்போது உற்சாகமடைந்த மக்கள்.

மதுரை- போடி ரயில்வே வழித்தடத்தில் அகல ரயில்பாதை தேனி வரை நிறைவடைந்துள்ள நிலையில் இன்று ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.

மதுரை- போடி மீட்டர் கேஜ் ரயில் பாதை 90 கி.மீ., துாரம் கொண்டது. இந்த பாதை 2010ம் ஆண்டு ஜனவரியில் மீட்டர் கேஜ் பாதையாக மாற்றும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு முன் மீட்டர் கேஜ் ரயிலை மக்கள் பிரியா விடைகொடுத்து அனுப்பி வைத்தனர்.

தற்போது மதுரையில் இருந்து தேனி வரை அகல ரயில்பாதை பணிகள் நிறைவடைந்து விட்டன. ஏற்கனவே மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரை அகல ரயில்பாதை பணிகள் முடிந்திருந்தன. தேனி வரை தற்போது பணிகள் நிறைவடைந்ததால், பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இன்று காலை என்ஜின் மட்டும் சோதனை ஓட்டத்திற்காக வந்தது.

இதனையே மக்கள் விழா போல் கொண்டாடி வரவேற்றனர். ஆண்டிபட்டியில் இருந்து 16 கி.மீ., துாரம் உள்ள தேனிக்கு ரயில் என்ஜின் 80 கி.மீ., வேகத்தில் சென்று சோதனை நடத்தியது. தேனி ஸ்டேஷனில் ஓரிரு நிமிடங்கள் வரவேற்பு முடிந்ததும் உடனே ஆண்டிபட்டிக்கு திரும்பியது.

வரும் 10ம் தேதி தேனியில் இருந்து சோதனை ரயில் ஆண்டிபட்டி வரை இயக்கப்பட உள்ளது. தற்போது போடி வரை அகல ரயில்பாதை பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் நிறைவடைந்ததும், மதுரை- போடி அகல ரயில் இயங்க தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business