பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பிறந்தநாள் விழா- பொங்கல் விழா

பென்னிகுவிக் மணிமண்டபத்தில்  பிறந்தநாள் விழா- பொங்கல் விழா
X

லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் பென்னிகுவிக் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் மணி மண்டபத்தில் அவரது 181வது பிறந்தநாள்- பொங்கல் விழாவை விவசாயிகள் கொண்டாடினர்

லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முல்லை பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு இன்று 181வது பிறந்தநாள் விழா. ஆண்டு தோறும் அவரது பிறந்தநாளும், பொங்கல் திருநாளும் ஒன்றாகவே வரும். எனவே ஆண்டுதோறும் விவசாயிகள் இவரது மணி மண்டபத்தில் பொங்கல் வைத்து பிறந்தநாளையும் சேர்த்தே கொண்டாடுவார்கள்.

இன்று பாரதிய கிஸான் சங்க தேனி மாவட்ட தலைவர் டாக்டர் சதீஷ்பாபு, துணைத்தலைவர் கொடியரசன், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க செயலாளர் ஜெகன், பொருளாளர் ஜெயபால், 18ம் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் ராமராஜ் உட்பட ஏராளமானோர் இன்று பென்னிகுவிக் மணிமண்டபம் முன்பு பொங்கல் வைத்து, பொங்கல் விழாவையும், அவரது பிறந்தநாள் விழாவையும் கொண்டாடினர். அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விவசாயிகள் பெரும் திரளாக கூட வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியதால், முக்கிய நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.

பாரதீய கிஷான் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் சதீஷ்பாபு, துணைத்தலைவர் கொடியரசன் ஆகியோர் கூறியதாவது: பென்னிகுவிக் பிறந்தநாளை தமிழக அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தேனி மாவட்டம், மதுரை மாவட்டங்களின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படாத வகையில், நிலத்தின் வழியாக லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். இந்த விஷயங்களை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல கடும் முயற்சி எடுத்து வருகிறோம். தேனி மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் இந்த கோரிக்கையினை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முன்வர வேண்டும் என்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!